காரைக்காலில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை
காரைக்காலில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு கலெக்டர் அர்ஜுன் சர்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா, துணை கலெக்டர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தி.மு.க. சார்பில் நடந்த விழாவில் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாக.தியாகராஜன் மற்றும் பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
என்.ஆர் காங்கிரஸ் சார்பில் திருமுருகன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட தலைவர் சந்திரமோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரசு வணங்காமுடி, பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் துரைசேனாதிபதி ஆகியோர் தலைமையில் தனித்தனியாக சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அம்பேத்கர் கல்வி- சமுதாய மேம்பாட்டு மைய நிறுவன தலைவர் தணிகாசலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பு நிறுவனர் லட்சுமணன், தலித் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பு நிறுவனர் மனோகர், எஸ்.சி, எஸ்.டி. மக்கள்நல கூட்டமைப்பு நிறுவனர் காமராஜ், பீமராவ் அம்பேத்கர் சங்க தலைவர் பக்கிரிசாமி ஆகியோர் தலைமையிலும் தனித்தனியாக மரியாதை செலுத்தப்பட்டது.