காற்று, நீர் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நெடுங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் காற்று, நீர் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தது.
காரைக்காலை அடுத்த நெடுங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகமும், புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பும் இணைந்து காற்று, நீர்மாசுபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். ‘நீல கிரகணமான பூமியின் மீது காற்று மற்றும் நீர் மாசுபடுதலின் தாக்கம்’ என்ற தலைப்பில், விழிதியூர் அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்ராஜு பேசினார். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
தொடர்ந்து மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே காற்று, நீர் மாசுபாடு குறித்து நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக ஆசிரியர் தனராஜ் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் கருணாகரன் நன்றி கூறினார்.