கிடுகிடுவென உயர்ந்த பழங்களின் விலை - அதிர்ச்சியில் மக்கள்
கோயம்பேடு பழங்கள் சந்தையில் பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது,
சென்னை,
சென்னை கோயம்பேடு பழங்கள் சந்தையில் பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அன்னாச்சி, சாத்துக்குடி 55 லிருந்து 70 ரூபாயாகவும், ஆப்பிள் 150 லிருந்து 200 ரூபாயாகவும், வாழைத்தார் 250 லிருந்து 500 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
அதேபோல ஆரஞ்சு 50 லிருந்து 70 ரூபாயாகவும், பப்பாளி 15 லிருந்து 25 ரூபாயாகவும், சப்போட்டா 20 லிருந்து 60 ரூபாயாகவும், மாதுளை 150 லிருந்து 250 ரூபாயாகவும், கொய்யா 30 லிருந்து 60 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பழங்களின் வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக வியாபாரிகளும், மக்களும் குறைந்த அளவிலேயே பழங்களை வாங்குவதாகவும், கோயம்பேடு வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.