சசிகலா அரசியலை விட்டு விலகுவதே சரியானது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அரசியலை விட்டு விலகுவதே சரியானது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-11 15:16 GMT
சென்னை,

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலா குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்து கூறும்போது, 

"சசிகலாவை அதிமுக வின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லும் என்று நீதிமன்ற உத்தரவு கேட்டு ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் மகிழ்ச்சியடைந்தனர். 

சசிகலாவிற்கும், கட்சிக்கும் இனி எவ்வித தொடர்பும் இல்லை. அதிமுகவினர் தற்போது ஒற்றுமையாக உள்ளனர். அதிமுகவை சேர்ந்த யாரும் சசிகலாவிற்காக  குரல் கொடுக்கமாட்டார்கள். 

அதிமுகவை கைப்பற்றும் ஒவ்வொரு முயற்சியும் சசிகலாவிற்கு தோல்வியையே கொடுத்துள்ளது. எனவே சசிகாலா அரசியலை விட்டு விலகுவதே சரியானது". இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்