சென்னையில் மீன் விலை உயர்ந்தது
டீசல் விலை உயர்வால் கடலுக்கு செல்லும் விசைப்படகுகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் சென்னையில் மீன்கள் விலை அதிகரித்து உள்ளது.
சென்னை,
டீசல் விலை உயர்ந்து வருவதை தொடர்ந்து, சென்னை காசிமேடு உள்பட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் செல்லும் விசைப்படகுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் வழக்கத்தை காட்டிலும் மீன்களின் வரத்து குறைந்துள்ளது.
கடலுக்கு செல்லும் விசைப்படகுகள் குறைந்திருக்கும் நிலையில் மீன்களின் விலை அதிகரித்து உள்ளன. இதுகுறித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த மீன் வியாபாரி எம்.சி.பி.சின்னசதீஷ் கூறியதாவது:-
டீசல் விலை உயர்வு எதிரொலியாக கடலில் சென்று மீன்பிடிக்க விசைப்படகு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மீன்கள் விலை அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் மீன்கள் விலை சுமார் ரூ.50 முதல் ரூ.100 வரை உயர்ந்திருக்கின்றன. உள்ளூர் மீன்வரத்து குறைந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகா, மும்பை, ஒடிசா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தே மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.
இதற்கிடையில் மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. எனவே மீன்கள் விலை லேசாக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை நிலவரம்
சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட மீன்கள் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்)
சங்கரா (சிறியது) -ரூ.250, சங்கரா (பெரியது) -ரூ.350, நெத்திலி (சிறியது) -ரூ.150, நெத்திலி (பெரியது) -ரூ.250, வஞ்சிரம் (சிறியது) -ரூ.700, வஞ்சிரம் (பெரியது) -ரூ.900 முதல் ரூ.1,000 வரை, இறால் (சிறியது) -ரூ.200 முதல் ரூ.300 வரை, இறால் (பெரியது) -ரூ.350, நண்டு (சிறியது) -ரூ.200, நண்டு (பெரியது) - ரூ.250, சீலா- ரூ.350, ஏரி வவ்வால் -ரூ.150, கட்லா- ரூ.150, ரோகு -ரூ.150, கவளை-ரூ.100, வவ்வால்-ரூ.400 முதல் ரூ.600 வரை, கிளிச்சை-ரூ.100 முதல் ரூ.150 வரை, அயிலா- ரூ.200, தும்புலி-ரூ.150 முதல் ரூ.180 வரை, சுறா-ரூ.250, வாழை-ரூ.200, கொருக்கை-ரூ.400, கடம்பா-ரூ.250 முதல் ரூ.350 வரை, மத்தி-ரூ.100.
போக்குவரத்து, வண்டி வாடகை, ஆட்கள் கூலி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மார்க்கெட் விலையை ஒப்பிடுகையில் சில்லறை விலையில் மீன்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.