பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்

பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-10 17:19 GMT
கருமத்தம்பட்டி

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து மாணவியின் தாயார் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், திருப்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், ஆசைவார்த்தை கூறி மாணவியை சத்தியமங்கலத்திற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

 இதயைடுத்து போலீசார் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 வயது சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.  

மேலும் செய்திகள்