தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை

குடும்ப பிரச்சினையில் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-10 16:44 GMT
குடும்ப பிரச்சினையில் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ்காரர்
புதுச்சேரி கொம்பாக்கம் பேட் வில்லியனூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் விஜய் (வயது 31). புதுவை காவல்துறையில் சைபர் கிரைம் பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அலேஷ் நாத் தரியோ நோரின் என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது 1 வயது குழந்தை படிக்கட்டில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு பெரிதானது. வீட்டில் இருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்தனர். பின்னர் இரவு விஜய் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று படுத்துக்கொண்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இன்று காலை வெகுநேரம் ஆகியும் அவர் எழுந்து வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது விஜய் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜய், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்