நெல்லை: சுத்தமல்லி ஸ்ரீ ராமபிரான் கோவிலில் ராம நவமி விழா...!
நெல்லை சுத்தமல்லி ஸ்ரீ ராமபிரான் கோவிலில் ராம நவமி விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் ஸ்ரீ ராமபிரான் திருக்கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீ ராமபிரானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
அப்போது 10 அடி உயரமுள்ள ராமர், லட்சுமணர், சீதா தேவி சிலைக்கு 26 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.