மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-09 20:28 GMT
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மண்டல செயலாளர் பிரேம்நாத் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் கமல கண்ணன், தெற்கு மாவட்ட செயலாளர் மைக்கேல் மணிவண்ணன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் செல்வி, ஆவுடைய நாயகம், பிலிப் மாணிக்க ராஜ், விஜயகுமார், சுகுணா கண்ணன், இசக்கி முத்து, துணை செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்