நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக மாணவர் - காமன்வெல்த் போட்டிக்கு தேர்வு

சாத்தான்குளத்தைச் சேர்ந்த மாணவர் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று காமன்வெல்த் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

Update: 2022-04-09 17:34 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த முதலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சன்-எஸ்தர் செல்வராணி தம்பதியரின் மகன் ஜெஸ்வின் ஆல்ட்ரின். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

சிறுவயது முதலே நீளம் தாண்டுதலில் ஆர்வம் கொண்டிருந்த ஜெஸ்வின், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்துள்ளார். அந்த வகையில் கர்நாடகாவில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றார். இதன் மூலம் இந்த ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள ஜெஸ்வின் ஆல்ட்ரின் தேர்வாகியுள்ளார். 

மேலும் செய்திகள்