துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது..!

குடும்ப சண்டையில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-04-09 14:29 GMT
தர்மபுரி:

தர்மபுரி, ஏரியூர் அருகே உள்ள தொன்ன குட்ட அள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிடுவம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ் (47). இவரது மனைவி ராசாத்தி (40), இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்பொழுது கோவிந்தராஜ் தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை காட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதனைத்தொடர்ந்து இன்று காலை ராசாத்தி ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து ஏரியூர் போலீசார் கோவிந்தராஜை கைது செய்து, அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். குடும்ப சண்டையில் துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்து கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்