ரயிலில் கட்டுக்கட்டாக பணத்துடன் வந்த 2 பேரிடம் வருமான வரி துறையினர் விசாரணை..!

ஆவணமின்றி ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கொண்டு வந்த 2 பேர் வருமான வரி துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Update: 2022-04-09 13:12 GMT
சென்னை:

சென்னை, ஓட்டேரி போலீசார் இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையில் ஏட்டு ராஜசேகர் மற்றும் அருள் ஆகியோர் இன்று மதியம் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நாகராஜ் (36) மற்றும் நரேந்திரகுமார் (22) ஆகிய 2 பேர், ரயிலில் வந்தனர். அங்கு ஆட்டோவில் ஏறிய அவர்களிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.  

இதில் அவர்களிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா அல்லது கஞ்சா இருக்கும் என சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கட்டு கட்டாக பணம் இருப்பது கண்டு அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

அவர்களிடம் பணத்திற்கான தகுந்த ஆவணம் இல்லாததால் அவர்களிடம் இருந்த 60 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். 

தகுந்த ஆவணம் இல்லாமல் இந்தப் பணம் எதற்காக கொண்டு வந்தார்கள் மேலும் இது ஹவாலா பணமா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்