“தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள்” - சு.வெங்கடேசன் எம்.பி.
ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்க வேண்டும் என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சென்னை,
டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.
இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்” என்று அமித்ஷா தெரிவித்தார்.
அவரது இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன், இது குறித்து தனது டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-
“அரியணையில் யார் உட்காருவது ஆங்கிலமா? இந்தியா? என்றால் எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே.
ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுமே ஒன்றிய அரசின் தந்திரம்.
தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அரியணையில் யார் உட்காருவது ஆங்கிலமா? இந்தியா? என்றால் எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 8, 2022
ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுமே ஒன்றிய அரசின் தந்திரம்.
தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள். #Tamil#Hindi