மக்கள் நல பணியாளர்களுக்கு புதிய வேலை: சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வேலை உறுதி திட்டப்பணி ஒருங்கிணைப் பாளர் பதவிக்கு முன்னாள் மக்கள்நல பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தை தொடங்கி வைத்து அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜூ (மதுரை மேற்கு தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
குறுக்கிட்டு பேச வேண்டாம்
செல்லூர் ராஜூ:- நான் பேசும்போது அமைச்சர்கள் யாரும் குறுக்கிட்டு பேசவேண்டாம். நான் பேசி முடித்ததும் பதில் அளியுங்கள்.
அவை முன்னவர் துரைமுருகன்:- குறுக்கீடு செய்வதில் நீங்கள் டாக்டர் பட்டம் வாங்கியவராச்சே.
(அவையில் அப்போது சிரிப்பலை எழுந்தது)
மக்களை தேடி மருத்துவம் திட்டம்
செல்லூர் ராஜூ:- இந்தியாவின் சிறந்த முதல்-அமைச்சர் என்று கூறுகிறீர்கள். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆகியவற்றை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அம்மா உணவகத்தையும், அம்மா மினி கிளினிக்கையும் தொடர்ந்து நடத்த வேண்டும்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியால், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இப்போது வீடு தேடிப்போய் மருத்துவம் பார்க்கப்படுகிறது. அதன் மூலம், இதுவரை 60 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
மருந்து, மாத்திரை வழங்குவது யார்?
செல்லூர் ராஜூ:- மக்கள்நல பணியாளர்களை கொண்டு வீடு, வீடாக சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- அது தவறு. செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என்று இதற்காக 7,488 பேர் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள்நல பணியாளர்கள் நியமனம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- மக்கள் நல பணியாளர்கள் குறித்து இங்கே எழுப்பப்பட்டிருக்கக்கூடிய கேள்விக்கு, ஒரு நல்ல விளக்கத்தை நான் அளிக்க விரும்புகிறேன்.
ஊரகப்பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், கிராம பொதுச் சொத்துகளைப் பேணிக் காத்திடல், சிறு சேமிப்பு திட்டத்திற்கு உதவுதல் போன்ற கிராம அளவிலான பல்வேறு பணிகளுக்காக தலைவர் கருணாநிதியால் 2-9-1989-ல், ஒரு ஊராட்சிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்ற அடிப்படையிலே, மொத்தம் 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளுக்கு 25 ஆயிரத்து 234 மக்கள் நல பணியாளர்கள் அப்போது நியமனம் செய்யப்பட்டார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் ரத்து
13-7-1991-ல் இப்பணியிடங்கள் அன்றைய அ.தி.மு.க. அரசால் ரத்து செய்யப்பட்டது. உங்களுடைய அ.தி.மு.க. ஆட்சியில்தான் ரத்து செய்தீர்கள். மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்ததற்கு பின்பு மீண்டும் இப்பணியிடங்கள் 24-2-1997 அன்று தோற்றுவிக்கப்பட்டன. பின்னர் அமைந்த உங்களுடைய அ.தி.மு.க. அரசால் 1-6-2001 அன்று மீண்டும் ரத்து செய்யப்பட்டது. 12-6-2006-ல் தலைவர் கருணாநிதி மீண்டும் இப்பணியிடங்களைத் தோற்றுவித்து, ஊராட்சிக்கு ஒருவர் என 12 ஆயிரத்து 618 மக்கள் நல பணியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இறுதியாக 8-11-2011-லும் அன்றைய அ.தி.மு.க. அரசால் இப்பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டன. எப்பொழுதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் ரத்து செய்திருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மீண்டும் அவர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். இதுதான் மாறி, மாறி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
வழக்கு நிலுவை
இதனுடைய தொடர்ச்சியாக, மக்கள்நல பணியாளர்கள் சார்பாக பல்வேறு வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக மேல்முறையீட்டு வழக்குகளில் 19-8-2014 அன்று சென்னை ஐகோர்ட்டால் மக்கள் நல பணியாளர்களுக்கு மீளப் பணி வழங்கவேண்டும் என்ற அடிப்படையிலே தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பினை எதிர்த்து அப்போதைய அ.தி.மு.க. அரசு சார்பில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு விடுப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, 19-8-2014 நாளிட்ட உத்தரவில் சென்னை ஐகோர்ட்டு பணி நியமனம் வழங்க உத்தரவிட்டு அளித்த தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்தது. 11-8-2017 அன்று மேற்படி சிறப்பு விடுப்பு மனுக்கள் மேல் முறையீடாக மாறுதல் செய்யப்பட்டு, கடைசியாக 28-2-2022 அன்று விசாரணைக்கு வரப்பெற்று தற்போது நிலுவையில் இருக்கிறது.
பேச்சுவார்த்தை
இந்தநிலையில், மக்கள் நல பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை கருத்தில் கொண்டு இந்த அரசு பொறுப்பேற்றவுடன் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக அவர்களோடு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
பின்னர், நிலுவையில் உள்ள வழக்கில், தீர்ப்பிற்கு உட்பட்டு நீதிமன்ற ஆணைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில், பின்வரும் முடிவுகள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு உட்பட்டு எடுக்கப்பட்டுள்ளன.
ரூ.7,500 மதிப்பூதியம்
அதாவது, மாநிலத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் உள்ள “வேலை உறுதி திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர்” என்ற பணியிடத்தில் விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் மக்கள் நல பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, இப்பணி வாய்ப்பு வழங்கப்படும்.
இப்பணிக்கென ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பூதியத்தினை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தியும், மக்கள் நல பணியாளர்கள் ஏற்கனவே கிராம ஊராட்சி பணிகளில் பணியாற்றியதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கிராம ஊராட்சி பணிகளைக் கூடுதலாக கவனிக்க வாய்ப்பளித்து, அதற்கென மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கவும், இதன்படி இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த மதிப்பூதியமாக ரூ.7,500 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாரிசுகளுக்கும் முன்னுரிமை
இதுமட்டுமல்ல, கடந்த 10 ஆண்டு காலத்தில், காலமான மக்கள் நல பணியாளர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு, அவர்கள் விரும்பினால், அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றக்கூடிய வாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.