ஜெயலலிதா குறித்து அவதூறு பேச்சு: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதான வழக்கு ரத்து

ஜெயலலிதா குறித்து அவதூறு பேச்சு: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதான வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2022-04-08 23:53 GMT
சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இவர், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது, தமிழ்நாடு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.

இதுகுறித்து, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் இளங்கோவன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசவில்லை என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இளங்கோவன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்