அதிகரிக்கும் சைபர் மோசடி குற்றங்கள்: பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்
அதிகரிக்கும் சைபர் மோசடி குற்றங்கள் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை.
சென்னை,
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
‘விஷிங்’ என்று அழைக்கப்படும் போன் கால் மூலம் ஓ.டி.பி. பெறுவது மற்றும் ஏ.டி.எம். கார்டு விவரங்கள் கேட்பது என்ற நிலையில் இருந்து முன்னேறி மோசடி நபர்கள் தற்போது பல்வேறு யுக்திகளை கையாண்டு பொதுமக்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளனர்.
உதாரணமாக, கியாஸ் மானியம் உங்கள் வங்கி கணக்குக்கு வரும், எனவே வங்கி கணக்கு எண் கொடுங்கள் என்றும், போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது செல்போன் எண்ணை மாற்றி உங்கள் எண்ணை கொடுத்துவிட்டேன், உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி. வரும் அதை கொடுக்குமாறு கூறியும் அழைப்புகள் வரும். அந்த மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
‘பான் கார்டு’ விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் செல்போன் எண் அல்லது வங்கி கணக்கு முடக்கப்படும் என்று வரும் எஸ்.எம்.எஸ்.களை பொதுமக்கள் நம்பக்கூடாது. அந்த எஸ்.எம்.எஸ்.சில் வரும் லிங்கை கிளிக் செய்யக்கூடாது. அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்புகொள்ளக்கூடாது. மேலும் வேலைவாய்ப்பு என்பதுபோல் வாட்ஸ்அப்பிலோ, டெலிகிராமிலோ வரும் தகவல்களை நம்பி யாருக்கும் பணம் அனுப்பக்கூடாது. ‘லோன் ஆப்’ மூலம் கடன் வாங்க வேண்டாம்.
பொதுமக்கள் தாங்கள் நேரில் பார்க்காத, நன்றாக தெரியாத நபர்களின் பேச்சைக் கேட்டு பணம் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுமக்கள் எவரேனும் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் 1930 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.