மனைவியை தாக்கி கொலை மிரட்டல்

குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தனியார் நிறுவன மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

Update: 2022-04-08 17:54 GMT
புதுச்சேரி சண்முகாபுரம் சொக்கநாதன்பேட் நடுத்தெருவை சேர்ந்தவர் சீத்தாராமன் (வயது 32). தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி அஸ்வினி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அஸ்வினி தனது தாயார் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று குடிபோதையில் அஸ்வினி வீட்டிற்கு சென்ற சீத்தாராமன், மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சீத்தாரமான் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்