செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் செடல் தேர் திருவிழா

அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் செடல் தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Update: 2022-04-07 18:15 GMT
அரியாங்குப்பம் மாரியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் 108-ம் ஆண்டு செடல் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று இரவு தொடங்கியது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் பாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் வீரப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்