சென்னையில் புதிதாக சுரங்கப்பாதை, மேம்பாலம் - அரசின் அதிரடி திட்டம்
சென்னையில் புதிதாக சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது.
சென்னை,
சென்னையில் புதிதாக சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலம் அமைக்க ஏப்ரல் இறுதிக்குள் ஒப்பந்தம் கோரப்பட உள்ளது.
இதுகுறித்து நகர்ப்புற நிர்வாக கொள்கை விளக்கக்குறிப்பில் வெளியிட்டுள்ள செய்தியில் சென்னை மாநகராட்சியில் 26 மேம்பாலம், 14 வாகன சுரங்கப்பாதை, 5 பாதசாரிகள் சுரங்கப்பாதை, 234 சிறு குறு பாலங்கள் பராமரக்கப்பட உள்ளது.
எதிர்கால தங்கு தடையற்ற வாகன போக்குவரத்துக்காக சுமார் 286 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை கனேசபுரம் சுரங்கப்பாதை, மேம்பாலம், தெற்கு உஸ்மான் சாலை, சிஐடி நகர் முதல் பிராதன சாலை வரை மேம்பாலம் போகராஜநகர் ரயில்வே சந்திப்பு குறுக்கே வாகன சுரங்கப்பாதை அமைக்க உள்ளது தெரிய வந்துள்ளது.