திருச்சி: ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை தூக்கி சென்ற கொள்ளையர்கள்....!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை கொள்ளையர்கள் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-04-07 04:45 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அருகே மரவனூரைச் சேர்ந்தவர் சாவித்திரி ஓய்வு பெற்ற தாசில்தார். இவரது மகன் மணிகண்டன். 

தமிழ்நாடு காகித தொழிற்சாலை 2-ம் அலகில் பணியாற்றி வருகிறார். சாவித்திரி வெளியில் சென்று விட்ட நிலையில் அவரது மகன் மற்றும் மருமகள் உள்ளிட்டோர் வீட்டில் இருந்தனர்.

நேற்று இரவு அனைவரும் வழக்கம் போல் தூங்க சென்று விட்ட நிலையில் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி தூங்கிக் கொண்டடிருந்த அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு பின்னர் வீட்டில் இருந்த பீரோவை சிறிது தூரம் வீட்டிற்கு வெளியில் தூக்கிச் சென்று உள்ளனர். 

பின்னர் அங்கு உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் பணம், வெள்ளி விநாயகர் சிலை ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று உள்ளனர். 

இதனை அறியாத மணிகண்டன் தனது நண்பருக்கு தொடர்பு கொண்டு கதவை திறக்க சொல்லி உள்ளார். அப்போது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர், இது தொடர்பாக  மணிகண்டன கொடுத்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்