திருவண்ணாமலை ரெயில்வே மேம்பாலம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

திருவண்ணாமலை ரெயில்வே மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

Update: 2022-04-06 23:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நகரம், அண்ணா சாலை – திண்டிவனம் சாலையை இணைக்கும் வகையில் ரூ.38.74 கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. தற்போது மேம்பால பணிகள் கடந்த ஜனவரி மாதம் முடிக்கப்பட்டது. 666 மீட்டர் நீளம் மற்றும் 30 தூண்களைக் கொண்டு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருவண்ணாமலை ரெயில்வே மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) காணொலி வாயிலாக காலை 9.30 மணியளவில் திறந்து வைக்க உள்ளார். இதனால் திருவண்ணாமலை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேம்பாலம் தற்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

மேலும் செய்திகள்