மக்களுக்கு தி.மு.க.வின் தேர்தல் பரிசே, சொத்துவரி உயர்வு -எடப்பாடி பழனிசாமி

சொத்துவரி உயர்வு தொடர்பான முதல்-அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2022-04-06 07:43 GMT
சென்னை

சட்டசபையில் இன்று பேசிய தமிழக முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின்  சொத்துவரி உயர்வை மனம் உவந்து செய்யவில்லை. ஏழை-எளிய, நடுத்தர மக்களை பாதிக்காமல், சொத்துவரி உயர்த்தபட்டு உள்ளது. சொத்துவரி உயர்வு தவிர்க்க முடியாதது 83 சதவீத மக்களை இந்த சொத்துவரி உயர்வு பாதிக்காது என்பது தான் உண்மை. தற்போது உள்ள உள்ளாட்சி நிதியை வைத்து எதுவும் செய்ய முடியாது என்பதால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது. என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், சொத்து வரி உயர்வு தொடர்பான முதல்- அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து பேரவையில் இருந்து அ.தி.மு.க. பா.ஜ.க. ஆகிய கட்சி உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

பின்னர் நிருபர்களை  சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கொரோனா பாதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் மீது பெரும் சுமையை அரசு சுமத்தியுள்ளது. உடனடியாக சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்.

சொத்துவரியை கண்டிப்பாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு எந்த இடத்திலும் சொல்லவில்லை. வாடகை வீட்டில் வசிப்போரும் சொத்துவரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு தி.மு.க.வின் தேர்தல் பரிசே, சொத்துவரி உயர்வு  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்