சத்தியமங்கலம் வனப்பகுதி சாலையில் இரவிலும் இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சத்தியமங்கலம் வனப்பகுதிச் சாலையில் இரவிலும் இலகுரக வாகனங்கள் செல்ல சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது
சென்னை,
சத்தியமங்கலம் வனப்பகுதிச் சாலையில் இரவிலும் இலகுரக வாகனங்கள் செல்ல சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக சாலையில் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்திற்கு தடை விதித்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் . இதனை அமல்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
இதனை தொடர்ந்து மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது .
இதற்கு எதிராக அந்த பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பாரத சக்கரவர்த்தி அமர்வு இன்று வழங்கியுள்ள அந்த உத்தரவில் ;
சத்தியமங்கலம் வனப்பகுதிச் சாலையில் இரவிலும் இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதி .கனரக வாகனங்களுக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.
பொதுபோக்குவரத்து, இருசக்கர வாகனங்களுக்கு காலை 6 முதல் இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி அப்பகுதி மக்கள் உரிய அனுமதியுடன் சென்று வரலாம் .
அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் 30 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது அனைத்து நேரங்களிலும் பால் மற்றும் மருத்துவ பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுளள்து