10 வருடங்களாக செய்யாத திட்டங்களை 10 மாதங்களில் செய்து கொண்டிருப்பது தி.மு.க. ஆட்சி - மு.க.ஸ்டாலின்
10 வருடங்களாக செய்யாத திட்டங்களை 10 மாதங்களில் செய்து கொண்டிருப்பது தி.மு.க. ஆட்சி என்று விழுப்புரம் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம், ஒழுந்தியாம்பட்டில் நேற்று நடந்த அரசு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பாச உணர்வு
என்னுடைய உரையை தொடங்குவதற்கு முன்பு உங்களிடத்திலே ஒரு கேள்வி கேட்கப்போகிறேன். நீங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறீர்களா?. நானே நேரடியாக உங்களுக்கருகிலே வந்து, உங்களிடத்திலே நீங்கள் காட்டிய அந்த பாச உணர்வுக்கு நன்றியை தெரிவிக்கக்கூடிய வகையில் எல்லோரிடத்திலும் இல்லை, குறிப்பிட்ட ஒரு சிலரிடத்தில் மட்டும் கை குலுக்கி உங்கள் வாழ்த்துகளை நான் பெற்றேன்.
அப்போது சில தாய்மார்களிடத்திலே, சகோதரிகளிடத்திலே நான் ஒரு கேள்வியைக் கேட்டேன். இப்பொழுது நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய இந்த 10 மாத கால தி.மு.க. ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேட்டேன். ரொம்ப சிறப்பாக இருக்கிறது என்று தாய்மார்கள் சொன்னார்கள். ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்று கேட்டேன். எந்த குறையும் இல்லை, இந்த 10 மாத காலமாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நிம்மதியாக இருக்கிறோம்.
தொடர வேண்டும்
ஆகவே இன்றோடு அல்ல, இது தொடரும், தொடரவேண்டும். அப்படி தொடர வேண்டும் என்பதற்காக உறுதி எடுத்துக்கொள்ளக்கூடிய நிலையிலேதான் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
பெரியாரும், இந்த திராவிட இயக்கமும் தோன்றாமல் போயிருந்தால், இந்த தமிழ்ச்சமூகம் இன்று இத்தகைய நிலைக்கு வந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான். இந்த இயக்கத்தின் 100 ஆண்டுகால வரலாற்று சாதனைகளை நாம் உணர முடியும்.
காரணம் யார்?
பழமைவாத கருத்துகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் இன்றைக்கும் பின்பற்ற பரப்புரை செய்து கொண்டிருக்கக்கூடிய சிலரது ஆதிக்கத்தால், நாட்டில் என்ன மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் எழுகின்றது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும், புரியும்.
அந்த சூழ்ச்சிகள் தமிழ்நாட்டில் எடுபடாமல் போனதற்கு காரணம் யார் என்று கேட்டால், பெரியார், அண்ணா, தலைவர் கருணாநிதி. திராவிட இயக்கத்தினுடைய தலைவர்கள்தான்.
திராவிட மாடல்
1997-ம் ஆண்டு பெரியார் நினைவு சமத்துவபுர திட்டத்தை கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது தொடங்கிவைத்தார். அனைத்துவிதமான முற்போக்கிற்குரிய புரட்சிகளுக்கும் நாட்டுக்கே முன்னோடியாக விளங்கக்கூடிய நம்முடைய தமிழ்நாட்டில்தான் இத்தகைய சமத்துவபுரங்கள் உருவாகியிருக்கிறது. இதுதான் சமத்துவத்தை பேசிக்கொண்டிருக்கக்கூடிய ‘திராவிட மாடல்!’.
கருணாநிதியின் கொள்கையை, அவரது சிந்தனைகளை, அவரது நினைவுகளை, அவரது கனவுகளை என்னுடைய மூச்சென முன்னெடுத்து செல்லக்கூடிய நிலையிலே நான் இருக்கிறேன் என்பதற்கு அடையாளமாகத்தான், இந்த சமத்துவபுரத்தை நான் திறந்து வைத்திருக்கிறேன். 2010-2011-ம் ஆண்டிலே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டம் இது. 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி, தமிழகத்துக்கு இருண்டகாலமாக இருந்ததுடைய அடையாளம்தான், அதற்கொரு சாட்சியாக இந்த சமத்துவபுரம் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
சமத்துவபுரத்தைப் போல 2011-ம் ஆண்டுக்கு பிறகு கைவிடப்பட்ட மற்றொரு முக்கியமான திட்டம் இருக்கிறது என்று சொன்னால், அண்ணா மறுமலர்ச்சி திட்டம். அதுவும் தலைவர் கருணாநிதியால்தான் தொடங்கி வைக்கப்பட்டது. நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது என்றால் அதில் முக்கியமான திட்டமாக, ஒரு தனி சிறப்பு திட்டமாக இந்த திட்டம் இருந்தது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் கடந்த ஓராண்டில் மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு ரூ.6,970 கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது. இதில், கிராம ஊராட்சிகளுக்கு விடுவிக்கப்பட்டது மட்டும் ரூ.4,500 கோடி ஆகும்.
3¼ லட்சம் பணிகள் முடிப்பு
மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 204 ஊரக வீடுகளுக்கு ரூ.1,162 கோடி மதிப்பீட்டில் குடிநீர் குழாய் இணைப்புகள் ஓராண்டில் வழங்கப்பட்டிருக்கிறது. 2021-22-ம் ஆண்டில் மட்டும் 5,696 கி.மீ. நீளமுள்ள சாலைப்பணிகள் மற்றும் 54 பாலங்கள் அமைக்க ரூ.2,223 கோடி செலவிடப்பட்டு இருக்கிறது.
இந்த அரசு, நம் அரசு பொறுப்பேற்ற பிறகு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டுகளில் நிலுவையில் இருந்த 3 லட்சத்து 35 ஆயிரத்து 759 பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது.
சுயஉதவி குழுக்கள்
ஊரகப்பகுதிகளில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 887 வீடுகளை ரூ.8,017 கோடி மதிப்பீட்டில் கட்ட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 1 லட்சத்து 4 ஆயிரத்து 345 வீடுகளின் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
4 லட்சத்து 8 ஆயிரத்து 740 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.21 ஆயிரத்து 392 கோடி வங்கிக்கடன் வழங்கி, மிகப்பெரிய சாதனையை நம்முடைய அரசு இன்றைக்கு உருவாக்கியிருக்கிறது.
10 மாதங்களில் செய்தது தி.மு.க.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின்கீழ் கடந்த ஓராண்டில் (2021-22), ரூ.23,841 கோடி மதிப்பீட்டில் 18 லட்சத்து 21 ஆயிரத்து 37 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இவை எல்லாம் ஒரே ஒரு துறையின்கீழ், கடந்த ஓராண்டுக்குள் செய்து தரப்பட்டவை மட்டுமே. இப்படி ஒவ்வொரு துறையாக சொல்ல முடியும்.
10 ஆண்டு காலம் செய்துதர வேண்டிய திட்டங்களை, 10 வருடமாக செய்யாத திட்டங்களை, பத்தே மாதத்தில் செய்து கொண்டிருக்கக்கூடிய ஒரு ஆட்சிதான் நம் ஆட்சி. இதை நீங்கள் நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.