காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து; வாலிபருக்கு ஆயுள் தண்டனை
காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
சென்னை,
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.சி.ஏ. படித்த 25 வயது இளம்பெண், கடந்த 2016-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.
அப்போது அதே நிறுவனத்தில் திருப்பூர் மேற்கு கே.வி.ஆர்.நகரைச் சேர்ந்த அரவிந்த்குமார் (வயது 32) என்பவர் தன்னை காதலிக்க வலியுறுத்தி இளம்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதன்காரணமாக இளம்பெண் வேலையை விட்டு நின்று விட்டார்.
இந்தநிலையில் 25.10.2016 அன்று சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் வந்த இளம்பெண்ணிடம், அரவிந்த்குமார் தன்னை காதலிக்கும்படி மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
ஆயுள் தண்டனை
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை அரவிந்த்குமார் கத்தியால் குத்தினார். இதில், பலத்த காயம் அடைந்த இளம்பெண் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்த்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பி.ஆரத்தி ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அரவிந்த்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
நீதிபதி கண்டனம்
அபராத தொகையில் ரூ.10 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் நீதிபதி தனது தீர்ப்பில், ‘இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இதுபோன்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கும் வகையிலும், பெண்கள் முன்னேற்றத்துக்கு தடையை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கிறது.
இத்தகைய சம்பவங்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்' என்று கூறி உள்ளார்.