உறவினர்கள் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை
பள்ளிக்கு செல்லாததை உறவினர்கள் கண்டித்ததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி ஜீவானந்தபுரம் பிரியதர்ஷினி வீதியை சேர்ந்தவர் முகேஷ் கண்ணன் (வயது 17). தந்தை இல்லாத நிலையில் சற்று மனநிலை பாதித்த தாயின் பராமரிப்பில் இருந்து வந்தார். 9-ம் வகுப்பு வரை படித்துள்ள முகேஷ் கண்ணன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரது உறவினர்கள் கண்டிக்கவே மனவேதனையுடன் இருந்து வந்த முகேஷ் கண்ணன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.