பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய 4 பேர் கைது
பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய 4 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்
புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மதுபார் அருகே 3 வாலிபர்கள் மதுபோதையில் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று 3 வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அய்யங்குட்டிபாளையத்தை சேர்ந்த டிரைவர் திருமூர்த்தி (வயது 27), தர்மாபுரியை சேர்ந்த மணிகண்டன் (23), விஜய் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் மங்கலம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் போலீசார் ஆச்சாரியாபுரம் கீழ்அக்ரஹார பகுதியில் ரோந்து சென்றபோது கோர்க்காடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா என்கிற விக்டர் (23) என்பவர் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிக்கொண்டிருந்தார். அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.