சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் தலைமையில் கூட்டாட்சி நிதி வடிவத்தை உருவாக்க சட்ட, பொருளாதார வல்லுனர்கள் குழு
சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் தலைமையில் கூட்டாட்சி நிதி வடிவத்தை உருவாக்க சட்ட, பொருளாதார வல்லுனர்கள் குழு தமிழக அரசு உத்தரவு.
சென்னை,
மத்திய அரசால் விதிக்கப்பட்ட வரிகள் முழுமையாக குறிப்பிட்ட நோக்கத்துக்காக பயன்படுத்தப்படவில்லை என்றும், குறிப்பிட்ட காலத்துக்கு விதிக்கப்படும் கூடுதல் வரிகள் காலவரையின்றி தொடர்கின்றன என்றும் இந்திய கணக்கு தணிக்கை துறை தலைவரின் அறிக்கையை சுட்டிக்காட்டி கடந்த 2021-2022-ம் ஆண்டு பட்ஜெட்டின்போது கூட்டாட்சி நிதி வடிவம் ஒன்றை உருவாக்க வருவாய் மற்றும் வரி விதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உள்பட) புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுனர்கள் கொண்ட ஆலோசனை குழுவை தமிழக அரசு ஏற்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் அரவிந்த் பி.டட்டார் தலைமையில் இந்த ஆலோசனை குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் கி.வைத்தீஸ்வரன், ஜி.நடராஜன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவன சேவைப்பிரிவு துணைத்தலைவர் சுரேஷ்ராமன், வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஸ்ரீவத்ஸ்ராம்,
ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் அமைப்பின் தலைவர் கே.வேல்முருகன் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.