"எதுவுமே வேண்டாம்.. என்கிட்ட வாங்க.. நான் பாத்துக்கிறேன்" - பெண் சாமியார் அன்னபூரணி அழைப்பு
பொது மக்களுக்கும் ஆன்மீக பயிற்சி வழங்குவதாகவும், ஆன்மீக பயிற்சி வழங்கி அவர்களுக்கு முக்தி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த இராஜாதோப்பு பகுதியில் அன்னபூரணி என்ற பெண் சாமியார் ஆசிரமம் கட்ட நிலம் வாங்கி இன்று அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தான் ஒரு சாமியார் என்று சொல்லிக்கொள்ளும் அன்னபூரணி கலந்து கொண்டார்.
பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் பேசிய பெண் சாமியார்,
தான் அனைத்து பொது மக்களுக்கும் ஆன்மீக பயிற்சி வழங்குவதாகவும், ஆன்மீக பயிற்சி வழங்கி அவர்களுக்கு முக்தி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரமம் தொடங்க காரணம் என்னவென்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், தன்னால் அதிக பணம் செலவழிக்க முடியாது, குறைந்த அளவில் பணம் செலவழித்து இந்த இடத்தை வாங்கியதாகவும் இந்த இடத்தில் வரும் பொதுமக்களுக்கு ஆன்மீகம் மற்றும் அதனை சார்ந்து வரும் அனைத்து விஷயங்களையும் போதித்து அவர்களுக்கு முக்தி அடைய பயிற்சி தருவதாக தெரிவித்தார்.
ஆன்மிகம் என்றால் அதற்கான தனி ஆடை அணிய தேவையில்லை, உணவு பழக்க வழக்கங்கள் எதுவும் தேவை இல்லை, ஆன்மீகமும் நடைமுறை வாழ்க்கையும் ஒன்றுதான் என்பதை புரியவைக்க உள்ளதாக தெரிவித்தார்.