மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை..!

சாதிச் சான்றிதழ் வழங்க கோரி கணிக்கர் இன மக்கள் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2022-04-04 05:53 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டம், புதுப்பேட்டையில் கணிக்கர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கணிக்கர் இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை சாதிச் சான்றிதழ் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் ஊர்வலமாக வந்து கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சாதி சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தினர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்