இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் - கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்-அமைச்சர்

இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கும் விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2022-04-04 05:31 GMT
சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கொடியசைத்து துவங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5.80 கோடி ரூபாய் மதிப்புள்ள 69 புதிய வாகனங்களை அறநிலையத்துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.

தலைமை செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மந்திரி சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பொதுமக்களுக்கான காவல்துறையினரின் சேவைகளை அவசர காலங்களில் பெரும் வகையில் தமிழ்நாடு காவல்துறையினரால் உருவாக்கப்பட்டுள்ள காவல் உதவி செயலியையும் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

முன்னதாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர்  கல்லூரியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் புதிய விடுதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழக அரசின் தலைமை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் இளநிலை உதவியாளர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரையிலான அனைத்து தரப்பிரனுக்குமான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மேலும், துணை அலுவலர்களுக்கான அலுவலக நடைமுறை, தகவல் பெறும் உரிமை சட்டம், ஒழுங்கு நடத்தை விதிகள், மன அழுத்த மேலாண்மை, குழு மேலாண்மை, ஓய்வுக்கு முன்தைய ஆலோசனை, நேர மேலாண்மை, பேரிடர் மேலாண்மை, தலைமை பண்புகள் உள்ளிட்ட அரசு பணிகளில் சேரக்கூடிய மற்றும் சேர்ந்த பலத்தரப்பட்ட பிரிவினருக்கும் இங்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த கல்லூரியில் பயிற்சியின் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் அண்ணா நிர்வாக கல்லூரி வளாகத்தில் ரூ.8.70 கோடி மதிப்பில் புதிதாக 2 கட்டிடங்கள் கட்டப்பட்டன. அந்த புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   

மேலும் செய்திகள்