தமிழக கவர்னருக்கு எதிராக மக்களவையில் திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்

கவர்னர் குறித்து விவாதிக்க திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.

Update: 2022-04-04 03:24 GMT
புதுடெல்லி,

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, தமிழக அரசிற்கு எதிராக செயல்படுகிறார். நீட் தேர்வு ரத்து மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிய நிலையில், அதனை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார். 

நீட் தேர்விற்கு எதிராக சட்டசபையில் மீண்டும் தீர்மானை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியும், அதனை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்துகிறார். 

இந்த நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி மக்களவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை தாக்கல் செய்துள்ளது. திமுக எம்.பி, டி.ஆர். பாலு மக்களவை சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை தாக்கல் செய்தார். 

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் படி, கவர்னர் தனக்கான பொறுப்புகள் மற்றும் கடமைகளை செய்ய தவறுகிறார்., சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்,  நீட் தேர்வு ரத்து உட்பட மூன்று சட்ட மசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் கவர்னர் காலம் தாழ்த்தி வருவதாகவும் டி.ஆர்.பாலு குறிப்பிட்டு நோட்டீசை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்