விற்பனைக்கு வரத்து அதிகரிப்பு மா-பலா சீசன் தொடங்கியது
மாம்பழம் மற்றும் பலா சீசன் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.
சென்னை,
ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில்தான் பலாப்பழ சீசன் களை கட்டும். அந்தவகையில் இந்த ஆண்டு பலாப்பழம் சீசன் கடந்த வாரம் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து மார்க்கெட்களில் பலாப்பழம் விற்பனைக்கு வந்துகொண்டிருக்கிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடலூர், பண்ருட்டி பகுதிகளில் இருந்து பலாப்பழங்கள் விற்பனைக்காக வரத்தொடங்கி உள்ளன. இதனால் மார்க்கெட் வளாகம் முழுவதும் மணமணத்து போயிருக்கிறது.
இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் அண்ணா அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க தலைவர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-
கிலோ ரூ.50 வரை விற்பனை
மனதை மயக்கும் பலாப்பழ சீசன் தொடங்கி இருக்கிறது. கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் விரைவில் பலா வரவழைக்கப்பட உள்ளன. தற்போது கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரையிலும் பலாப்பழம் விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக செந்தூரம் ரக மாம்பழங்களே வந்துகொண்டிருக்கின்றன. கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ஒரு வார காலகட்டத்தில் அல்போன்சா, மனோரஞ்சிதம், மல்கோவா, காசா, கிளி மூக்கு, பங்கனபள்ளி, நீலம், ருமானி, இமாம்பசந்த் ரக மாம்பழங்கள் வந்துவிடும். அந்தவகையில் வரும் வாரத்தில் மா, பலா விற்பனை களைகட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விலை நிலவரம்
கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பழங்கள் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்)
ஆப்பிள் (காலா) - ரூ.200 முதல் ரூ.230 வரை, ஆப்பிள் (சிம்லா) - ரூ.180 முதல் ரூ.200 வரை, மாதுளை- ரூ.180 முதல் ரூ.200 வரை, கிர்ணி- ரூ.25 முதல் ரூ.30 வரை, பப்பாளி- ரூ.30 முதல் ரூ.35 வரை, தர்பூசணி- ரூ.15 முதல் ரூ.20 வரை, கொய்யா- ரூ.40 முதல் ரூ.50 வரை, சப்போட்டா- ரூ.40 முதல் ரூ.50 வரை, சாத்துக்குடி- ரூ.60 முதல் ரூ.70 வரை, ஆரஞ்சு (ராஜஸ்தான்) - ரூ.70 முதல் ரூ.100 வரை, ஆரஞ்சு (மால்டா) - ரூ.130 முதல் ரூ.150 வரை, ஆரஞ்சு (எகிப்து) - ரூ.130 முதல் ரூ.150 வரை, திராட்சை (கருப்பு) - ரூ.100, திராட்சை (பன்னீர்) - ரூ.100, திராட்சை (பச்சை சீட்லெஸ்) - ரூ.100 முதல் ரூ.120 வரை, திராட்சை (கருப்பு சீட்லெஸ்) - ரூ.150, அன்னாசி- ரூ.60 முதல் ரூ.70.