வியாபாரிகள் இரு தரப்பினர் மோதல்
தொழில் போட்டியில் வியாபாரிகள் இரு தரப்பினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி சோலைநகர் மருதம் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் செஞ்சி சாலையில் பொம்மை கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகில் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த வேலு என்பவர் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
தொழில் போட்டி காரணமாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரு தரப்பினரும் கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். உருட்டுகட்டை, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.