வினாத்தாள் லீக் : புதிய வினாத்தாள்கள் அனுப்பி தேர்வு - கல்வித்துறை உத்தரவு
புதிய வினாத்தாள்கள் அனுப்பி தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது
சென்னை ,
10 ,11 ,12ம் வகுப்பு மாணவர்களுக்கு சமீபத்தில் முதல் திருப்புதல் தேர்வு நடந்தது .அதில் 10, 12ம் வகுப்பு தேர்வுக்கான பல வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைதளத்தில் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்நிலையில் இரண்டாம் திருப்புதல் தேர்வு சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் கணித வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது
ஏற்கனவே முதல் கட்ட திருப்புதல் தேர்வின் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான நிலையில் மீண்டும் திருப்புதல் தேர்வின் கணித வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மின்னஞ்சல் மூலமாக பள்ளிகளுக்கு புதிய வினாத்தாள்கள் அனுப்பி தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது