மெரினாவில் அலை மோதிய மக்கள் கூட்டம்...!

சென்னை மெரினா கடற்கரையில் அலை மோதிய மக்கள் கூட்டம்.

Update: 2022-04-03 14:00 GMT
சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் விடுமுறை நாளான இன்று அதிக அளவில் மக்கள் குவிந்தனர். இதனால் கடற்கரை மணல் பரப்பு முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்து காட்சி அளித்தது.

ஜல்லிக்கட்டு போராட்ட கட்டுப்பாடு, கொரோனா கட்டுப்பாடு போன்ற பல தடைகளுக்கு பின்பு மெரினாவிற்கு செல்ல பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிலையில் வார இறுதி நாளான இன்று வழக்கத்தைவிட மெரினாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.  இந்த எண்ணிக்கை மெரினான கடற்கரையின் மணல் பரப்பை மறைக்கும் அளவிற்கு காணப்பட்டது. 

அப்போது கடலில் இறங்கியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் மெரினா கடற்கரையில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்