சிவகங்கை கவுன்சிலர் வெற்றி குறித்து வழக்கு - மேல்முறையீடு செய்வதற்கு எதிராக கேவியட் மனு

சிவகங்கை கவுன்சிலராக அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு எதிரான வழக்கு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-02 15:49 GMT
கோப்புப் படம்
சிவகங்கை,

சிவகங்கையில் கவுன்சிலராக அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு எதிரான வழக்கு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கல்லல் ஊராட்சியின் 9வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சரஸ்வதி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக வேட்பாளரை விட 34 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்ததாலும், முறைகேடாக அதிமுக வேட்பாளர் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது என முறையிடப்பட்டது. 

மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கறிஞர் மோகன்குமார் முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. 

இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டால் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என கூறி சுப்ரீம் கோர்ட்டில் சரஸ்வதி கேவியட் மனு தாக்கல் செய்தார். 

மேலும் செய்திகள்