திருப்பத்தூர் அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்து- உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் இறந்த நிலையில் மேலும் சிலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்துார் .
திருப்பத்துார் அருகே ஜவ்வாதுமலையில் புங்கனுார் நாடு மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 30 பேர் கோவில் திருவிழாவிற்காக நெல்லிவாசன் நாடு என்ற கிராமத்திற்கு மினி வேனில் சென்றனர்.
காலை 11:30 மணிக்கு புதுார்நாடு என்ற இடத்தில் சென்ற போது மினி வேன் அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மினி வேன் அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகினார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு திருப்பத்துாரில் இருந்து போலீசார், தீயணைக்கும் துறையினர் சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.