ஈரோட்டில் திடீரென உயர்ந்த டீ, காபி விலை - வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி
ஈரோட்டில் வணிக எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளதால், டீ மற்றும் காபியின் விலை அதிகரித்துள்ளது.
ஈரோடு,
ஈரோட்டில் வணிக எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து அதிகரித்துள்ளதால், டீ மற்றும் காபியின் விலை அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பிற்கு பிறகு ஈரோட்டில் டீ கடைகளில் வியாபாரம் இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. இதனால், வியாபாரிகள் கவலையில் உள்ளனர். இந்த நிலையில், பால், டீ தூள், சர்க்கரை, வணிக சிலிண்டர் என அனைத்து பொருட்களும் உயர்ந்துள்ளாதால், டீ மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு மாநகரில் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீ தற்போது 12 ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட காபியின் விலை 18 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டீ மற்றும் காபியின் விலை உயர்ந்துள்ளதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். நஷ்டத்தை தடுக்கும் வகையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீ கடை வியாபாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.