திண்டுக்கல்லில் டாக்டர்கள் வேலை நிறுத்தம்..!

தவறான சிகிச்சை அளித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-02 08:33 GMT
திண்டுக்கல், 

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் டாக்டர் அர்ச்சனா. இவர் மீது தவறான சிகிச்சை அளித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் டாக்டர் அர்ச்சனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

இதையொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன. வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. மேலும் இந்திய மருத்துவர் சங்கத்தின் திண்டுக்கல் கிளை தலைவர் மகாலட்சுமி, செயலாளர் ஜோசப் கிறிஸ்டோபர் பாபு ஆகியோர் தலைமையில் ஏராளமான டாக்டர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி டாக்டர் அர்ச்சனாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்