ஏனாமில் 12 பவுன் நகை திருட்டு
ஏனாமில் 12 பவுன் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் கோபால் நகரை சேர்ந்தவர் சத்திய நாராயணா (வயது 68). ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்தார்.
அப்போது வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து சத்தியநாராயணா அளித்த புகாரின்பேரில் ஏனாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.