மனைவி மீது நடிகர் பாலாஜி புகார்..!
சின்னத்திரை நடிகர் பாலாஜி தன் மனைவி மீது இன்று புகார் அளித்துள்ளார்.
சென்னை,
சினிமாவில் காமெடியனாக நடித்து வரும் தாடி பாலாஜி, தனியார் டிவியின் பல காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
நடிகர் தாடி பாலாஜி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு போர்ஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.
நடிகர் பாலாஜிக்கும், நித்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக இருவரும் ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்து இருந்தனர்.
இந்நிலையில், சின்னத்திரை நடிகர் பாலாஜி தன் மனைவியிடம் இருந்து மகளை மீட்டுத் தரக் கோரி மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.