பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்
முத்தியால்பேட்டையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் குளிப்பதை வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். உடனே அவர், அந்த வாலிபரிடம் சென்று தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி தப்பிச்சென்றார்.
இதுகுறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பெண்ணை வீடியோ எடுத்தது அதே பகுதியை சேர்ந்த சரத் (வயது 30) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.