பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளக்காதலன்.....!

பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-31 06:00 GMT
குளச்சல்,

குமரி மாவட்டம் புதுக்கடை அள்ளம் சேனவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜையன்(வயது 48). இவர் அப்பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் வேலை பார்த்து வருந்துள்ளார்

இவருக்கு கணவர் மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளனர்.  கடைக்கு வேலைக்கு வரும் சிறுமியின் தாய்க்கும், கடை உரிமையாளர் ராஜையனுக்கும் இடையே  கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ராஜையன் வாரந்தோறும் விடுமுறை நாளில் பெண் ஊழியர் வீட்டிற்கு சென்று வருவாராம்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி  பெண் ஊழியர் வீட்டிற்கு வந்த ராஜையன் பெண் ஊழியரின் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெண் ஊழியரின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் எஸ்.பி.அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பியூலா பெல் ஜெனகா குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சிறுமியின் பாலியல் தொல்லைக்கு தாயும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜையன் ஆகிய இருவர் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

சிறுமியின் பாலியல் தொல்லைக்கு தாயே உடந்தையாக இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

மேலும் செய்திகள்