திருமண ஆசைகாட்டி 20 பெண்கள் பாலியல் பலாத்காரம்: கைதான காதல் மன்னனின் ஜாமீன் மனு தள்ளுபடி

திருமண ஆசைகாட்டி 20 பெண்கள் பாலியல் பலாத்காரம்: கைதான காதல் மன்னனின் ஜாமீன் மனு தள்ளுபடி சென்னை கோர்ட்டு உத்தரவு.

Update: 2022-03-30 20:52 GMT
 சென்னை,

சென்னை புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் முகமது செய்யது (வயது 26). பி.காம். பட்டதாரியான இவர், விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

இவர் மீது மாடல் அழகிகள் 3 பேர், தங்களை காதலிப்பதாக கூறி பழகி, திருமண ஆசை காட்டி உடல்ரீதியாக உறவு வைத்து லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

இந்த புகார் குறித்து வேப்பேரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியபோது, முகமது செய்யது திருமண ஆசைகாட்டி 20-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இந்தநிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தங்கமாரியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், முகமது செய்யதின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்