விழிப்புணர்வு படகு சவாரி
நதிநீர் குறித்த விழிப்புணர்வு படகு சவாரியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் நிஷா ஜோஸ். இவர் நதிநீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நதிகளை தூய்மையாக பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுச்சேரி தேங்காய்திட்டு ஆற்றில் சுமார் 2 மணி நேரம் படகு சவாரி மேற்கொண்டார்.
இதன் தொடக்க விழாவில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் கலந்து கொண்டு படகு சவாரியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.