தூக்குப்போட்டு மீனவர் தற்கொலை
புதுவையில் குடும்ப பிரச்சினையால் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை அடுத்த சின்ன காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 37). மீனவர். இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று பிரசன்னா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்த காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்துக்கு வந்து பிரசன்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.