பெண்ணின் தலையில் பேன் பார்த்த குட்டி குரங்கு - வைரலாகும் வீடியோ...!
கோத்தகிரி அருகே பெண்ணின் தலையில் பேன் பார்க்கும் குட்டி குரங்கின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குரங்கு குட்டி ஒன்று பெண்ணின் தோளில் ஏறி அமர்ந்து ' பேன் ' பார்த்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளில் குரங்குகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த குரங்குகள் வீட்டிற்குள் புகுந்து உணவுப் பொருட்களை தின்று நாசம் செய்து வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும், இவ்வாறு தொடர்ந்து வரும் குரங்குகளில் சில குரங்குகள், பொதுமக்களுடன் இயல்பாக பழகத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கக்குளா கிராமப் பகுதிக்கு வந்த குரங்குக் கூட்டத்திலிருந்த குட்டிக் குரங்கு ஒன்று அங்கு நின்றுக் கொண்டிருந்த பெண் ஒருவரின் தொல் மீது ஏறி அமர்ந்தது. பின்னர் அவர் தலையில் பேன் பார்க்கத் தொடங்கியது.
இதைக் கண்டு ஆச்சரியமடைந்த அப்பகுதி இளைஞர்கள் இந்த காட்சியைத் தங்களது மொபைல் போனில் வீடியோவாக படம் பிடித்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பெண்ணின் தலையில் பேன் பார்த்த குட்டி குரங்கு - வைரலாகும் வீடியோ pic.twitter.com/JSHSbyZZ6e
— DailyThanthi (@dinathanthi) March 30, 2022