ஏப்ரல் 1 முதல் உயர்கிறது சுங்கச்சாவடி கட்டணம்...!
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சூரப்பட்டு, வானகரம் சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை,
மத்திய நெடுஞ்சாலை ஆணையம் கூறியிருப்பதாவது:
ஏப்ரல் 1ந்தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
* வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணத்தை உயர்த்துவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. சுங்கக்கட்டணம் உயர்வு என்ற அறிவிப்பு வாகன ஓட்டிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், மத்திய அரசு கட்டணத்தை உயர்த்துவது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.