2 நாள் பொது வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது

நாடு முழுதும் பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்பினர் நடத்திய இரு நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நேற்றுடன் முடிவடைந்தது.

Update: 2022-03-30 03:37 GMT
சென்னை,

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக்கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை தொடர வேண்டும் உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் பொது வேலைநிறுத்தம் நேற்று முன்தினம் தொடங்கியது.  2-வது நாளாக பொது வேலைநிறுத்தம் நடந்த நிலையில்  நேற்றுடன் முடிவடைந்தது.

வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் காரணமாக 1.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 1 கோடி காசோலைகள் பரிவர்த்தனைகள் நேற்றும் பாதிக்கப்பட்டன. நிதியாண்டு முடியும் தருவாயில் வேலை நிறுத்தம் நடந்ததால் அரசு பரிவர்த்தனைகள் உட்பட பல்வேறு பெரிய பரிவர்த்தனைகள் முடங்கின.

2-வது நாளாக பொது வேலைநிறுத்தம் நடந்த நிலையில் தமிழகத்தில் நேற்று 89 சதவீத அரசு பஸ்கள் இயங்கின.  அதேவேளை வங்கி பணிகளும் வழக்கம்போல நடந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்